யாழில் நெடுந்தூர போக்குவரத்து நிலையம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைப்பு
யாழ்ப்பாணம் வெளி மாவட்டங்களுக்கான நெடுந்தூர போக்குவரத்து நிலையம் சம்பிரதாயபூர்வமாக இன்று (27) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இந்த நெடுந்தூர போக்குவரத்து நிலையம் சுமார் 120 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி கரையோரப் பாதுகாப்பு கழிவுப்பொருட்கள் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவின் பணிப்புரைக்கு அமைய, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய பேருந்து நிலையம் இன்று சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலைய பெயர்ப்பலகை திரையினை வடமாகாண ஆளுநர் எச்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளர் அங்கஜன் இராமநாதன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மாநகர முதல்வர் வி. மணிவண்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திறந்து வைத்துள்ளனர்.





ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri