நெடுந்தூரப் பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய நடைமுறை
நெடுந்தூரத் தனியார் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மேம்பட்ட சாரதி உதவி அமைப்புகள் (ADAS) மற்றும் சாரதி கண்காணிப்பு அமைப்புகளை (DMS) நிறுவும் முன்னோடித் திட்டம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்று(08.10.2026) அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு
இத்திட்டத்தின் நோக்கம், வீதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதும், நெடுந்தூரத் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை அதிகரிப்பதும் ஆகும்.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இந்த அமைப்புகள், சாரதியின் நடத்தையைக் கண்காணிப்பதற்கும் சாத்தியமான அபாயங்களைக் கண்டறிவதற்கும் உதவுவதோடு, சாரதிகளிடையே பாதுகாப்பான ஓட்டுநர் பழக்கவழக்கங்களையும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீதிப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், நெடுந்தூரப் பயணிகள் போக்குவரத்தில் ஏற்படும் விபத்துக்களைக் குறைக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முன்னெடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri