உலகில் நீளமான “அமாிக்கன் ட்ரீம் காா்” மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பம்.
அமாிக்காவில் பயன்படுத்தப்பட்ட உலகின் மிக நீளமான world’s longest car ”அமெரிக்கன் டிரீம் காரை” The American Dream மறுசீரமைக்கும் பணி மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
”அமெரிக்கன் டிரீம் கார்“ உலகின் மிக நீளமான கார் என்று 1986 இல் கின்னஸ் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கார், 100-அடி நீளம் (30.5 மீட்டர்) கொண்டது.
மிகவும் திறமை கொண்ட வடிவமைப்பாளரான ஜே ஓர்பெர்க் Jay Ohrberg என்பவரால் உருவாக்கப்பட்டது.
இவர் தான் தொலைக்காட்சி தொடரான ” கினைட்”-ல் பயன்படுத்தப்படும் பிரசித்தக் காரையும் வடிவமைத்தார்.
பல ஹொலிவுட் படங்களில் வரும் நவீன பல கார்களையும் அவா் வடிவமைத்தாா். எனினும் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய ”அமெரிக்கன் டிரீம் கார்” The American Dream ஒருகட்டத்தில் கைவிடப்பட்டு முறையான பராமரிப்பின்றி கைவிடப்பட்டது.
பராமரிப்பின்மைக் காரணமாக சக்கரங்கள் மற்றும் காரின் ஜன்னல்கள் சேதமடைந்தன.
இந்தநிலையில் பெருமை வாய்ந்த இந்த ”அமெரிக்கன் ட்ரீமை” The American Dream மீட்டெடுக்கும் முயற்சியில் நியூயார்க்கின் ஒரு தொழில்நுட்ப கற்பித்தல் அருங்காட்சியகம் ஈடுபட்டது.
2019 இல் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
எனினும் கொரோனா பாதிப்பு காரணமாக மறு சீரமைப்பு பணிகள் தடைப்பட்டன.
தற்போது அந்தப்பணிகள் மீண்டும் ஆரம்பித்துள்ளன.
அமெரிக்கன் டிரீம் காரின் சிறப்பம்சங்கள்:
”அமெரிக்கன் டிரீம் காா்” The American Dream 30.5 மீட்டர் (100 அடி) நீளம் கொண்டது.
26 சக்கரங்களை கொண்டுள்ள இந்த நீளமான கரை இருபுறமும் இயக்க முடியும் இந்த காரின் முன் மற்றும் பின்புறத்தில் ஒரு ஜோடி வி8 இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது நீளமான கார் மட்டுமல்ல, ஆடம்பர சொகுசு வாகனமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீச்சல் குளம், குளியல் தொட்டி, மினி-கொல்ப் மைதானம் உட்பட்ட வசதிகள் இந்த காரில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் இதில் பயணம் செய்ய முடியும். தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் தொலைபேசி வசதிகள் உள்ளிட்ட இன்னும் பல வசதிகளை உள்ளன.
இந்த கார் சினிமாவுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.
எனினும் தனிப்பட்ட உபயோகத்திற்காக ஒரு மணி நேரத்திற்கு 50 டொலர் முதல் 200 டொலர் வரையான கட்டணமும் வசூலிக்கப்பட்டது.