லண்டனில் நடைபெற்ற மாபெரும் தமிழர் மரபுத்திங்கள் விழா!

Tamils London
By Jenitha Jan 29, 2023 09:54 PM GMT
Report

புலம்பெயர் தமிழர்களின் விடாமுயற்சியால், ஜனவரி மாதம் தமிழ் மரபுத்திங்கள் என இங்கிலாந்து நகரசபையால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், தமிழ் மொழியின் பெருமையயும் தமிழர்களின் கலை கலாச்சார பண்பாடுகளையும் எடுத்துக்காட்டும் மாபெரும் தமிழ் மரபுத் திங்கள் விழா இங்கிலாந்தில் நடைபெற்றது.

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் தகவல் நடுவம் (TIC) மற்றும் சமூக அபிவிருத்திக்கான மையம் (CCD) ஆகியன இணைந்து கிங்ஸ்டனின் நியூமோல்டனில் உள்ள Jubilee Square எனும் இடத்தில் மேற்படி தமிழ் மரபுத் திங்கள் விழா வெகுசிறப்பாக  நேற்று நடத்தப்பட்டுள்ளது.

Royal Borough of Kingston, Newmalden Partnership, Institute of Tamil Culture, மற்றும் சறே தமிழ் பாடசாலை ஆகியவர்களின் இணை அனுசரணையுடன் இந்த விழா சிறப்புற நடைபெற்றது.

லண்டனில் நடைபெற்ற மாபெரும் தமிழர் மரபுத்திங்கள் விழா! | London Tamil Heritage Month Celebration

IBC தமிழ், நமது ஈழநாடு மற்றும் மெய்வெளி ஆகியன ஊடக அனுசரணை வழங்கினர்.

இந்த விழாவிற்கு பிரதம விருந்தினர்களாக லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு சேர் எட் டேவி (Rt.Hon.Sir Ed Davey), ரிச்மண்ட் பார்க் மற்றும் நார்த் கிங்ஸ்டன் நாடாளுமன்ற உறுப்பினர் சாரா ஓல்னி (Hon. Sarah Olney), கிங்ஸ்டன் நகரபிதா கவுன்சிலர் யோகன் யோகநாதன்- Mayor of Royal Borough of Kingston Upon Themes), அவரின் பாரியாரான மேயரஸ் சரோஜினி யோகநாதன், கிங்ஸ்டன் நகரசபை தலைவர் கவுன்சிலர் அன்றியஸ் கேர்ஸ்ச் (Cllr. Andreas Kirsch), கிங்ஸ்டன் கவுன்சில் நிறைவேற்று பணிப்பாளர் சாரா அயர்லாந்து (Sarah Ireland CEO) ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டு  உரையாற்றினர்.

மேலும் முன்னாள் மேயரும் தற்போதய கவுன்சிலருமான தயா தயாளன் மற்றும் பல கவுன்சிலர்கள், தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தனர்.

லண்டனில் நடைபெற்ற மாபெரும் தமிழர் மரபுத்திங்கள் விழா! | London Tamil Heritage Month Celebration

தமிழர் கலை கலாச்சாரம் 

தமிழர் கலை கலாச்சார பண்பாடுகளை முற்று முழுதாக வெளிக்கொணரும் இக் கொண்டாட்டத்தில் தமிழரின் வீர இசையான பறை இசை முழங்க, நாதஸ்வர-தவில் இசையுடன் புலியாட்டம், காவடி ஆட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம் உட்பட்ட மேலும் பல கண்கவர் தமிழர் கலைகள், தமிழர் பாரம்பரிய உடைகள், திருமண பெண் அலங்காரம் மற்றும் பண்டைய இசை வாத்தியங்கள் என்பவற்றை காட்சிப்படுத்தியபடி இலண்டன் நியூமோல்டன் வீதிவழியாக பவனி வந்து, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களும் பெரும் திரளான மக்களும் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். 

மேற்குறித்த திறந்த வெளி அரங்கில் தைப்பொங்கல் காட்சிப்படுத்தல் இடம்பெற்றதுடன், அரங்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இன்னிய வாத்திய கச்சேரி, தமிழ்தாய் வாழ்த்து நடனம், கோலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், தமிழர் வர்மக்கலை மற்றும் கும்மி நடனம் என தமிழ் திங்கள் கோலகலமாக கொண்டாடப்பட்டதுடன் ஒன்றுதிரண்டிருந்த பெருந்திரளான மக்களிற்கு பொங்கலும் வழங்கி மகிழப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நியூமோல்டன் மெதடிஸ்த தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த உள்ளக அரங்கிற்கு கொண்டாட்டம் நகர்ந்ததுடன் அங்கே மேலும் பல தமிழர் பாரம்பரிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.

லண்டனில் நடைபெற்ற மாபெரும் தமிழர் மரபுத்திங்கள் விழா! | London Tamil Heritage Month Celebration

இலங்கைத் தமிழர்கள்: ஒரு காலவரையறையற்ற பாரம்பரியம்

உள்ளக அரங்கில் சிறப்பம்சமாக “இலங்கைத் தமிழர்கள்: ஒரு காலவரையறையற்ற பாரம்பரியம்” (Tamils of Lanka: A Timeless Heritage) என்ற கண்காட்சி இடம்பெற்றது.

தமிழர் வீரவரலாற்றையும், பண்டைய பாவனைபொருட்கள் மற்றும் இனஅழிப்பையும் காட்சிப்படுத்துவதாக இந்த கண்காட்சி அமைந்தது. இதேபோல சமையல் கலை நிபுணரான கொளரி ரூபன்னின் தமிழ் பாரம்பரிய உணவுக்கண்காட்சியும் இடம்பெற்றது.

லண்டனில் நடைபெற்ற மாபெரும் தமிழர் மரபுத்திங்கள் விழா! | London Tamil Heritage Month Celebration

அத்துடன், உள்ளக அரங்க நிகழ்வுகளான தவில்- நாதஸ்வர சமா, உடுக்கு இசை, சிறார்களின் நடனங்கள், பொங்கல் பாடல் ஆட்டம், கூத்து, நாடகம் என்பன இடம்பெற்றன.

இந்த நிகழ்வின் அதிவிசேட நிகழ்வாக, பிறேமாலய நாட்டிய சேஸ்திரா கல்லூரியின் ஸ்தாபகரும், யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஆசிரியை நாட்டிய கலை மாமணி பிறேமளாதேவி ரவீந்திரன் பெருமையுடன் வளங்கிய “இன்னியம்” என்ற தமிழர் பாரம்பரிய இசை வாத்தியங்களின் அணிவகுப்பு மற்றும் ஈழ நாட்டியம் (இராவணன் கதை) என்பன இந்த நிகழ்வை மேலும் சிறப்பித்தன.

ஐக்கிய இராட்சியம் லண்டன் மாநகரில் முதன் முறையாக தமிழர்களின் ஈழத்து பாரம்பரிய நாட்டியமாகிய கூத்தை லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழ் மகாநாட்டில் முதன் முறையாக அரங்கேற்றிய பெருமை கலாநிதி பாலசுகுமார், கலைமாமணி பிறேமளாதேவி ரவீந்திரன் இருவருக்குமே சேரும்.

லண்டனில் நடைபெற்ற மாபெரும் தமிழர் மரபுத்திங்கள் விழா! | London Tamil Heritage Month Celebration

தமிழர் பாரம்பரிய ஈழ நாட்டியம்

அன்று தொடக்கம் இன்றுவரைக்ககும் தமிழர் பாரம்பரிய ஈழ நாட்டியத்தை மிக நேர்தியாக தங்கள் மாணவர்களை பயிற்று பலதடவை அரங்கேற்றி வருகின்றனர். உஷா ரகுநாதனின் மாணவர்களின் கிராமிய நடனம், V2 நாட்டிய குழுவின் கும்மியாட்டம், கொவென்றி சித்திர கலைமன்ற மாணவர்களின் முருகன் கொளத்தவம் நாட்டிய நாடகம், சாம் பிரதீபன் மற்றும் றஜித்தா பி்ரதீபன் அவரகளின் மெய்வெளி கலையக மாணவர்களின் மற்றும் தெருக்கூத்து இறுதியாக தமிழ் மற்றும் தமிழர்களின் தற்போதைய நிலைபற்றிய மெய்வெளி நாடக அரங்க கலைஞர்களின் “வீழாத்தாய்” இசை வழி நாடகமும் அரங்கேற்றப்பட்டன.

தமிழ் கலாச்சாரம் மற்றும் பரம்பரியம் பற்றிய இரண்டாம் தலைமுறையினரின் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

உலகில் பல இடங்களில் தமிழர் தமிழர் விழாக்கள் இடம்பெற்ற போதும், இந்த விழா மற்றவற்றை விட அதிசிறப்பானதாக இருந்ததாக பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது.

குறிப்பாக, வேறு எங்கும் நடைபெறாத இளைஞர்களின் புலியாட்டம் மிகவும் வரவேற்பைப் பெற்று இருந்தது. கலாநிதி காமராஐரின் வீரக்கலைகள் பாசறையால் வழங்கப்பட்ட கம்பு, சிலம்பு, வாள்வீச்சு மற்றும் வர்மக்கலை காட்சிகள் மிகச்சிறப்பாக இருத்தன. இவ்வாறு மேலும் பல அரிய நிகழ்வுகளுடன் இந்த கொண்டாட்டம் வேறு எங்கும் இல்லாதவாறு வெகுசிறப்பாக நிறைவுபெற்றது. 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிலான், Italy, இத்தாலி, Italy

13 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Thirunelvely, சொலோதென், Switzerland

14 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை கிழக்கு, மீசாலை, துணுக்காய், London, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Swindon, United Kingdom

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, திருநெல்வேலி, Markham, Canada

13 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, கிளிநொச்சி, திருவையாறு

06 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், பண்டத்தரிப்பு

14 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, Markham, Canada

13 May, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada, Michigan, United States, Altena, Germany

10 May, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Whitchurch-Stouffville, Canada

10 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Anaipanthy

03 May, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Scarborough, Canada

12 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Scarborough, Canada

11 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US