தமிழ் மக்களுக்கு எதிரான பல அட்டூழியங்கள்! லண்டனில் சந்திரிகாவுக்கு கடும் எதிர்ப்பு
லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ் மாணவர் அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இலங்கையின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் இந்த நிகழ்வானது, “சிலோன் டு ஸ்ரீலங்கா: தேசத்தில் ஒரு பயணம்” என்ற தலைப்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

கூட்டறிக்கை வெளியீடு
இந்த அழைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் இளையோர் அமைப்பு பல்வேறு மாணவர் அமைப்புகளின் கையெழுத்தோடு கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை அழைப்பதற்கு பல காரணங்களை முன்வைத்து அமைப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
அந்த வகையில், 1995 கடற்படைத் தேவாலய குண்டுவெடிப்பு, 1995 நாகர்கோவில் பள்ளி படுகொலை, 1996 குமாரபுரம் படுகொலை, 1998 தம்பலகாமம் படுகொலைகள் மற்றும் 1999 புதுக்குடியிடுப் படுகொலை உட்பட தமிழ் மக்களுக்கு எதிரான பல அட்டூழியங்களை மேற்கோள் காட்டியுள்ள மாணவர் சந்திரிக்காவை அழைத்திருப்பதை கடுமையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan