மீண்டும் தடைப்பட்ட லண்டன் ஹாட் ஏர் பலூன் திருவிழா
பிரித்தானியாவின் லண்டனில் இன்று(21) காலை திட்டமிடப்பட்டிருந்த ஹாட் ஏர் பலூன் திருவிழா சீரற்ற வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
The Lord Mayor’s Hot Air Balloon Regatta என அழைக்கப்படும் இந்த நிகழ்வு இந்த முறையுடன் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாகவும் கைவிடப்பட்டுள்ளது.
ஹாட் ஏர் பலூன் திருவிழா
இந்த நிகழ்வு 2019 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படவில்லை என்பதுடன் கோவிட் தோற்று காரணமாக 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் சாத்தியப்படாத நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகள் மோசமான வானிலை காரணமாக ஹாட் ஏர் பலூன் திருவிழா நடத்தப்படவில்லை.

ஐந்து ஆண்டுகளை தொடர்ந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வு இந்த ஆண்டில் மாத்திரம் ரத்து செய்யப்படுவது இதனுடன் இரண்டாவது முறையாகும்.
இந்த வருடம், ஜுலை மாதம் 7 ஆம் திகதி திட்டமிடப்பட்டு, பின்னர் இன்று (21)ஆம் திகதி மாற்றியமைக்கப்பட்டது.எனினும், சீரற்ற வானிலையினால் மீண்டும் தடைப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த நிகழ்வு நடாத்துவதற்கு நம்பிக்கை இருப்பதாக அறிவித்துள்ள அமைப்பாளர்கள், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 28) மாற்றியமைத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri