புலம்பெயர்ந்தோர் தொடர்பாக பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் எடுத்துள்ள முடிவு
பிரித்தானியாவின் புதிய அரசாங்கமான தொழிலாளர் அரசாங்கம் (Labour Party) 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானித்துள்ளது.
பிரித்தானியாவின் புதிய பிரதமர் கெய்ர் கெய்ர் ஸ்டார்மரின் (Keir Starmer) புதிய குடியேற்றத் திட்டங்களின் கீழ் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய கொன்சர்வேடிவ் (Conservative Party) அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ருவாண்டா நாடு கடத்தல் திட்டத்தை கைவிடுவதே புதிய தொழிலாளர் அரசாங்கத்தின் முதல் முடிவுகளில் ஒன்றாக இருந்தது.
ருவாண்டா திட்டம்
முன்னாள் பிரதமர் போரிஸ் ஜொன்சன் (Boris Johnson) அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தின் படி, புலம்பெயர்ந்தோர் ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பப்படுவர்.
போரிஸ் ஜொன்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னர், புதிய பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்கின் (Rishi Sunak) ஆட்சிக் காலத்திலும் ருவாண்டா திட்டம் பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.
ஆங்கில கால்வாய் வழியாக சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் வருவதை தடுக்க இந்த திட்டம் உதவும் என அவர் கூறியிருந்தார்.
புகலிட விண்ணப்பங்கள்
இந்நிலையில், இப்போது, ஸ்டார்மரின் தொழிலாளர் அரசாங்கம் சுமார் 90,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் புகலிட விண்ணப்பங்களை விரைவாகக் கண்காணிக்கத் தயாராக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவற்றில் சுமார் 60,000 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதில் இந்திய பெருங்கடலின் டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 60இற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களும் உள்ளடக்கப்படுவார்களா என்பது குறித்தும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
