லண்டனில் மாவீரர்களை நினைவு கூர்ந்து இரத்ததான நிகழ்வு - தமிழ் மக்கள் பங்கேற்பு
பிரித்தானியாவில் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு நிகழ்வு நேற்று நடைபெற்றது.
மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நேற்று “உயிர் கொடுத்தவர்களுக்காய் உதிரம் கொடுப்போம்“ எனும் தொனிப்பொருளின் கீழ் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யுத்தத்தில் உயிர் நீத்த மக்கள் மற்றும் மாவீரர்களை நினைக்கூறும் வகையில் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் கடந்த வாரம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
இரத்ததானம்
அதன் ஒருகட்டமாக நேற்று லண்டன் Shepherds Bush Donation Centre இல் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டு இரத்த தானத்தை வழங்கினர்.
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri