லொஹான் ரத்வத்தவிற்கு விளக்கமறியல்
மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட அவர் இன்றைய தினம் (07) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடு
லொஹான் ரத்வத்த தனது உறவினர் வீட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது கொள்ளுப்பிட்டி சந்திக்கு அருகில் அவர் ஓட்டிச் சென்ற ஜீப் மற்றுமொரு காருடன் மோதியதில் நேற்று (6) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரத்வத்த குடிபோதையில் வாகனம் செலுத்தியமை தெரியவந்துள்ளது.
அதன்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஹோம்லியாக இருந்த ஸ்ருஷ்டியா இப்படி.. நகைக்கடை திறப்பு விழாவுக்கு அப்படி ஒரு உடையில் வந்த வீடியோ Cineulagam

19 ஆண்டுகள் நிறைவு பெற்ற அஜித்தின் திருப்பதி படம் செய்துள்ள மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
