தமிழ் கைதி ஒருவருக்கு கொலை மிரட்டல்: இராஜாங்க அமைச்சருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் பிரவேசித்து தமிழ் கைதி ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் பிரதான நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜயசூரிய எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி அநுராதபுரம் பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, அங்கிருந்த தமிழ கைதி ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
இது குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோதே, பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளார்.