நானுஓயாவில் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து: ஒருவர் பலி
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெஸ்போட் மேற்பிரிவு காட்டுப்பகுதியில் மரங்களை ஏற்றிச்சென்ற லொறியொன்று சுமார் 200 அடி பள்ளத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவமானது இன்று (18.02.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது நானுஓயா டெஸ்போட் தோட்டம் வாழைமலை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய வடமலை மயில்வாகனம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
குறித்த நபர் நானுஓயா பிரதான நகருக்கு செல்வதற்காக லொறியில் ஏறி வந்த நிலையிலேயே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும் விபத்திற்குள்ளான லொறியின் சாரதி ஆபத்தான நிலையிலும், உதவியாளர் சிறு காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் தொழில்நுட்ப கோளாறு காரணமாக லொறி வீதியில் இருந்து விலகி, விபத்துக்குள்ளாகி உள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |