மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியிருக்கும்: லொகான் ரத்வத்தை எச்சரிக்கை
நாட்டிற்கு நல்லது செய்தால் நாங்கள் உங்களுக்கு ஆதரவளிப்போம், இல்லாவிட்டால் நாங்கள் மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியிருக்கும் என முன்னாள் அமைச்சர் லொகான் ரத்வத்தை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர் சமீபத்தில் அரசியல்வாதிகளின் மனைவிமார் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மாற்று நடவடிக்கை குறித்து எச்சரிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி என்னை மாத்திரமல்ல எனது மனைவியையும் கைது செய்தார். இது வெட்கக்கேடான விடயம். நீங்கள் என்னை மாத்திரமல்ல, எனது மனைவியையும் கைது செய்தீர்கள். தற்போது மற்றுமொரு முன்னாள் முதலமைச்சரும் அவரது மனைவியும் சிறையில் உள்ளனர்.
ஜேவிபி கால குற்றங்களிற்காக ஜனாதிபதியையும் அவரது சகாக்களையும் தூக்கிலிட வேண்டும். நாட்டிற்கு நல்லது செய்தால் நாங்கள் உங்களிற்கு ஆதரவளிப்போம், இல்லாவிட்டால் நாங்கள் மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியிருக்கும்.
நீங்கள் எத்தனை தரம் வேண்டும் என்றாலும் என்னை சிறையில் அடைக்கலாம், நீங்கள் எனது மனைவியை கைதுசெய்தால் என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
