பெலாரசில் உள்ள தூதரகத்தை மூடியது அமெரிக்கா! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
நீண்ட இழுபறிக்குப் பிறகு ரஷ்யா, உக்ரைன் இடையே பெலாரஸ் நாட்டில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகின்றமையால் பெலாரஸ் நாட்டில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா மூடி உள்ளது.
குறித்த அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களில், அத்தியாவசிய பணிகள் தொடர்பான ஊழியர்கள் தவிர மற்ற ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய படைகள் மேற்கொள்ளும் நியாயமற்ற தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு பிரச்சினைகள் உருவாகியிருப்பதால் இந்த நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் கூறியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து கேட்டுவருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களில், அத்தியாவசிய பணிகள் தொடர்பான ஊழியர்கள் தவிர மற்ற ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
