தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பல பீடங்களுக்கு பூட்டு
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பல பீடங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
அதன்படி பிரயோக விஞ்ஞான பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சீரற்ற காலநிலையுடன் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் சீரற்ற காலநிலை
நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் பதிவாகி வருகின்றன.
இந்த நிலையில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை இன்றிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 7 மணி நேரம் முன்

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
