தெஹிவளை தபால் நிலையத்திற்கு பூட்டு
பணியாளர் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாக, தெஹிவளை தபால் நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை தபால் நிலையத்தில் கடமையாற்றி வரும் பெண் பணியாளர் ஒருவர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக தபால் நிலையத்தினை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
தற்காலிக அடிப்படையில் இந்த தபால் நிலையம் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த திங்கட்கிழமை பணிக்கு வந்த குறித்த பெண் உத்தியோகத்தர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் மூலம் அந்தப் பெண்ணுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த பெண் உத்தியோகத்தர் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam