மூடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கால்நடை பண்ணைகள்
பண்ணைகளில் கால்நடைகள் திருட்டு போவது அதிகரித்துள்ளதால் அவை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் 14,000 கால்நடை பண்ணைகள் பல்வேறு காரணங்களால் அண்மையில் மூடப்பட்டுள்ளதாக கோபா குழுவில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மூடப்பட்டுள்ள பெரும்பாலான பண்ணைகள் சிறிய அளவிலானவை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
பண்ணைகள் மூடப்படும் நிலை
பண்ணைகளில் கால்நடைகள் திருட்டு போவது அதிகரித்துள்ளதால் அவை மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், விலங்குகள் திருட்டு காரணமாக சிறு பண்ணைகள் மூடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கோபா குழு தெரிவித்துள்ளது.
மேலும் அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 104 ஆடுகள் இம்புலதண்டா மற்றும் தெலஹெர ஆடு வளர்ப்பு நிலையங்களில் இறந்தது குறித்தும் குழு கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |