மீண்டும் முடக்கமா! முடிவு என்ன? - செய்திகளின் தொகுப்பு
இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 21ஆம் திகதி தளர்த்துவதா? இல்லையா? என்பது குறித்து ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறவுள்ள கோவிட் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 21 ஆம் திகதி நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாட்டை ஜுன் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்துவதற்குக் கடந்த வாரத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,