தம்பலகாமத்தில் உள்ளூர் உற்பத்தி சந்தைப்படுத்தல்
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் மாதாந்த சந்தை தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் இன்று (24) இடம் பெற்றது. சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும் தம்பலகாம பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற சந்தை நிகழ்வில் உள்ளூர் உற்பத்தியாளர்களினால் தயாரிக்கப்பட்ட கைப்பணி பொருட்கள்,பனைசார் உற்பத்தி ,அழகு சாதன பொருட்கள் ,உணவு உற்பத்தி என பல பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டன.
இதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும் வருமானத்தை அதிகரிக்கவும் சந்தை உற்பத்திகளை விரைவுபடுத்தவும் இத் திட்டம் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரதேச செயலக சக உத்தியோகத்தர்கள்,பொது மக்கள் என பலரும் இணைந்து பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர்.

