டிஜிட்டல் மயமாகும் உள்ளூராட்சி நிறுவனங்கள்
உள்ளூராட்சி நிறுவனங்களில் பொதுப் பயன்பாட்டு கொடுப்பனவு சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த டிஜிட்டல் மாற்றமானது 'GOV PAY' எனும் விசேட கட்டண முறைமையின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அரச சேவைகளை நவீனமயப்படுத்தி
இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் உள்ளூராட்சி மன்றக் கொடுப்பனவுகளை இணைய வழியில் இலகுவாகச் செலுத்த முடியும்.

முதற்கட்டமாக 130 நிறுவனங்களில் இச்சேவை முழுமையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள ஏனைய அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் இந்த 'GOV PAY' முறைமையை அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார்.
அரச சேவைகளை நவீனமயப்படுத்தி, பொதுமக்களுக்கான சேவைகளை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam