தேர்தல் நடந்தால் அரசாங்கம் நிச்சயம் தோற்கும்! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்று நாங்கள் குறிப்பிடுகிறோம். அதனையே நானும் கருதுகிறேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கண்டி நகரத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நிதி நெருக்கடி என்று குறிப்பிட்டுக் கொண்டு தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது. தேர்தலை நடத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். நிதி இருந்தாலும் தேர்தலை நடத்த முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை தவறாகும்.
தேர்தலை நடத்த வேண்டும்
அரசாங்கம் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பில் மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமாயின் தேர்தலை நடத்த வேண்டும்.
எமது ஆட்சியில் தேர்தல் உரிய காலத்திற்கு முன்னதாகவே இடம்பெற்றது, அதற்கு காரணம் வெற்றி வெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. தேர்தல் ஒன்று இடம்பெற்றால் இந்த அரசாங்கம் வெற்றிபெறும் என்பது நிச்சயமற்றது.
மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்ய இடமளிக்க வேண்டும் ஆகவே தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இல்லை என்று நாங்கள் குறிப்பிடுகிறோம். அதனையே நானும் கருதுகிறேன் என குறிப்பிட்டார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
