ரணில் அரசாங்கத்தின் செயலை விரும்பாத மொட்டு கட்சி:மகிந்த வெளியிட்டுள்ள தகவல்
13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தற்போது அவசியமானது என நடப்பு அரசாங்கம் கருதினாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதனை முற்றாக மறுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (24.02.2023) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தம் தேவையில்லை
மேலும் கூறுகையில்,“நடப்பு அரசாங்கம் தற்போது 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது அவசியமானது என கருதுகின்றது.
ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதனை முற்றாக மறுப்பதுடன் அது தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம்
இதேவேளை, மக்களின் உரிமைகளை நிலைநாட்ட 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமானதாகும்.
மக்களின் தேவைகளைத் தீர்மானிக்கும் ஒரே வழி, தற்போதைய நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தலை நடத்துவது.
அத்துடன், தேர்தலை நடத்து அரசாங்கத்தின் கடமையாகும்."என தெரிவித்துள்ளார்.



