அரசாங்கத்தின் அறிவிப்புக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் போர்க்கொடி
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்பு சட்டவிரோதமானது என்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.
இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் எம்.பி.விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,
தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அறிவித்தது ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் முரணானது என்று நாங்கள் கருதுகிறோம்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
தற்பொழுது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல் விசேட சட்டமூலம் அடிப்படையில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு பெறப்படும் திகதி அறிவிக்கும் முழு அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அவர்களுக்கு கீழ் இயங்கும் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட காலத்திலிருந்து மூன்று மாதத்துக்குள் உள்ள ஒரு திகதியாக வேண்டும். ஆகவே தேர்தல் ஆணைக்குழு சகல அரசியல் கட்சி செயலாளர்களை அழைத்து கலந்தாலோசித்த பிற்பாடு திகதி அறிவிக்கப்பட வேண்டும்.
அரசாங்கத்துக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ சாதகமாக திகதியை தீர்மானிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாக நாங்கள் கருதுகிறோம் என்றும் குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 29 January, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா





ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
