உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுமார் ஏழாயிரம் தேர்தல் கண்காணிப்பாளர்கள்:ரோஹன ஹெட்டியாராச்சி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது சுமார் ஏழாயிரம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் மாவட்ட ரீதியிலான கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்தல் ஆணைக்குழு
எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கனவே இந்த மாத ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறுமா என்பதில் சந்தேகம் காணப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
