தேர்தல் தொடர்பில் வெளியிடவுள்ள மரண சான்றிதழ்! முன்னாள் தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட தகவல்
தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது மரண சான்றிதழ் வழங்குவது போன்று தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுதல் மட்டுமே எஞ்சியுள்ளது என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
கியூ.ஆர் குறியீடு காரணமாக எரிபொருள் இல்லை, நிதியில்லாத காரணத்தினால் வாக்குச்சீட்டு அச்சிட முடியவில்லை, நிதி பிரச்சினையினால் பொலிஸாருக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு கூறுகின்றது.
தேர்தல் ஒத்திவைப்பு
மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு அன்றி பணம் வழங்கப்பட முடியாது என நிதி அமைச்சு கூறுகின்றது.
ஆணைக்குழுவிற்கு புறம்பான காரணங்களினால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுகின்றது.இதற்கு யார் பொறுப்பு சொல்ல வேண்டும் என்பதனை என்னால் கூற முடியாது.
நான் இப்பொழுது களத்தில் இல்லை, நான் களத்தில் இருந்தால் எப்படி ஆட வேண்டும் என்பது எனக்குத் தெரியும், தற்பொழுது இருப்பவர்களுக்கு எவ்வாறு ஆட வேண்டுமென நான் கூறப் போவதில்லை.ஆடு களத்தில் இருப்பவர்கள் எவ்வாறு ஆட வேண்டும் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.




