எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், இன்றைய தினம்(07.03.2023) தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளனர்.
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், ஜீ.எல்.பீரிஸ், மனோ கணேசன், ரிசாட் பதியூதீன், ரஞ்சித் மத்துமபண்டார, ரவூப் ஹக்கீம், சாணக்கியன் ராசமாணிக்கம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இவ்வாறு தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை சந்திக்க உள்ளனர்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னதாக நடாத்தப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைத்தே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்றைய தினம் கூடி தேர்தல் தொடர்பில் ஆராய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan