பல பில்லியன் ரூபா செலவில் பொது வாக்கெடுப்பு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு செலவிடப்படும் பணத்தை கொண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு பெபரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பெபரல் அமைப்பு கோரிக்கை
பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு பத்து பில்லியன் ரூபா பணம் செலவாகும் எனவும் அந்த பணத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்த வேண்டுமென பெபரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நிச்சயமாக நடத்தப்பட வேண்டுமெனவும் பொது வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் அதனை ஒத்தி வைக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லை நிர்ணயப் பிரச்சினை
அவ்வாறான முயற்சிகள் வெற்றியளிக்காது எனவும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது குறித்த அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு அரசாங்கத்திடம் பணம் இருந்தால் அதனை உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக பயன்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லை நிர்ணயப் பிரச்சினை மற்றும் பணமில்லாமை போன்ற காரணிகளினால் உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் சில ஆண்டுகளாக ஒத்தி வைக்கப்பட்டு வருவதாக ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
