IMF பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார முன்னேற்றம்
அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புப் பொதியின் மூன்றாவது தவணையை வெளியிடுவதற்கான இரண்டாவது மீளாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மூன்றாவது மீளாய்வுக்கு நாடு தயாராக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அடுத்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல் மூன்றாவது மீளாய்வு தொடர்பானது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இதன்போது இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
[4PR5DIW']
மேலதிக தகவல்-சிவா மயூரி

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
