உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மனு! ஒத்திவைக்கப்பட்டது வழக்கு விசாரணை (Live)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது வழக்கு மீதான அடுத்த விசாரணை எதிர்வரும் மே 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்த திட்டமிட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஓய்வுபெற்ற கேர்னல் டப்ளிவ்.எம்.ஆர்.விஜேசூரிய தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றில் இன்று இடம்பெற்றது.
தேர்தலைப் பிற்போடும் நீதிப்பேராணையை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு ஒத்திவைப்பு தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது புலனாய்வுச் செய்தியாளர் நிலாந்தன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri
