அரச சேவை இடமாற்றம் தொடர்பில் வெளியாகியுள்ள திட்டவட்ட அறிவிப்பு
நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச சேவையில் இடமாற்றங்கள் செய்யப்பட முடியாது என தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
அரச சேவை இடமாற்றங்கள்
இந்த காலப்பகுதியில் இடமாற்றங்கள் செய்யப்பட வேண்டுமாயின் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்து அதன் அனுமதியுடன் மட்டுமே இடமாற்றம் செய்ய முடியும்.
தேர்தல் தொடர்பில் சகல சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடியும் வரையில் இந்த சட்ட ஏற்பாடுகள் பின்பற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
