அரசாங்கம் உடனடியாக மாகாண சபை தேர்தலை நடாத்தினால் அது ஜனநாயகத்தை மதிக்கும் செயலாகும்!
மாகாண சபை தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்துவது ஜனநாயகத்தை மதிக்கும் செயலாகும் என கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் இது தொடர்பில் இன்று (07) வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர், மேலும், "2017இல் இருந்து இது வரைக்கும் இருந்த அரசாங்கங்கள் ஒவ்வொரு சாட்டுப் போக்குகளையும் சொல்லி எப்படி மாகாண சபை தேர்தலை நடத்தாமல் பிற்போட்டார்களோ அது போல தற்கால அரசாங்கமும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும்.
மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஒரே அரசாங்கத்தையும் குற்றம்சாட்ட முடியாது ஏன் எனில் மாகாண சபை தேர்தல் கட்டம் கட்டமாக நடத்தப்பட்டதால் முதலாவதாக 2017ல் சப்ரகமுவ மாகாணம், கிழக்கு மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகிய மூன்று மாகாணங்களும் முடிவுற்றது.
2017இல் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தலைமையில் நல்லாட்சி அரசாங்கம், 2019இல் கோட்டபாய அரசாங்கம் போன்றன மாகாண சபை தேர்தலை நடத்துவதில் அக்கரை காட்டவில்லை.
அது போன்று 2022இல் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போதிலும் தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.
ஆனால், இந்த அரசாங்கம் தேர்தல் கொள்கை பிரகடனத்தில் தெளிவாக சொல்லப்பட்ட விடயம் தான் அரசாங்கத்தை கையில் எடுத்து ஒரு வருடத்திற்குல் நடத்துவதாக சொன்னார்கள் ஆனால் இருபது மாதங்களை கடந்து இரு வருடங்களை அண்மித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.