தேர்தல் தொடர்பில் சஜித் கொண்டுள்ள அதீத நம்பிக்கை
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது கூடுதலான உள்ளூராட்சி மன்றங்களை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பொய்களில் ஏமாற வேண்டுமா..
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் ஆகக்கூடுதலான பொய்களை கூறி பொதுமக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்துள்ளது.
இனியும் இவர்களின் பொய்களில் ஏமாற வேண்டுமா என்பதை பொதுமக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் கூடுதலான உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும். அந்த நம்பிக்கை எமக்குள்ளது என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
