விமர்சனங்கள் குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள பதில்
உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக தான் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் எதிர்க்கட்சிகளால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியால் வெற்றிபெறாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கப்படாது என்று தான் கூறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி மறுத்துள்ளார்.
தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, அரசால் கவனமாக சேகரிக்கப்படும் நிதி ஊழல் நிறைந்த உள்ளாட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்படாது என்று மாத்திரமே கூறியதாகக் தெரிவித்துள்ளார்.
எழுந்த குற்றச்சாட்டுக்கள்
மேலும், தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள சபைகள் மட்டுமே அவற்றைப் பெறும் என்பதல்ல. உள்நாட்டு வருவாய்த் துறையுடனான தினசரி சந்திப்புக்கள் மற்றும் சுங்கத் துறையை நெருக்கமாகக் கண்காணித்தல் மூலம், தற்போது திறைசேரியிடம் உள்ள பணத்தை நாங்கள் சேகரித்துள்ளோம்.
கவனமாக சேகரிக்கப்பட்ட அந்தப் பணத்தை ஊழல் நிறைந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒப்படைக்க முடியாது. நுவரெலியா நகராட்சி மன்றத்திற்குள் ஒரு குழு ஊழல் நிறைந்ததாக இருந்தால், இந்த நிதியை நாம் ஏன் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசாங்கம் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்ப்பது போல, உள்ளாட்சி மன்றங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
