நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது!
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 241 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (18) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது
அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 92 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 75 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 70 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன் ஒருவரும், குஷ் போதைப்பொருளுடன் 03 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, 91 கிராம் 890 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 131 கிராம் 220 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 02 கிலோ 96 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 2 கிராம் ஹேஷ் போதைப்பொருளும், 05 கிராம் 248 மில்லிகிராம் குஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri