தேர்தல் வர்த்தமானி அறிவித்தலை அச்சிட அனுமதி இல்லை
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் செயற்பாட்டுகளை அறிவிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்கான அறிவுறுத்தல், இதுவரை அச்சகத் திணைக்களத்திற்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலினை அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரச செய்தி பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தன கருணாரத்ன கூறியுள்ளார்.
திணைக்களத்தின் அரச செய்தி பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தன கருணாரத்னவின் கையொப்பத்தில் இந்த விசேட அறிவிப்பு இன்று (29.01.2023) வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான ஆவணங்களை அச்சடிக்கும் பணி அரச அச்சகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரச அச்சக அலுவலகத்தின் தலைவர் திருமதி கங்கானி லியனகே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 16 நிமிடங்கள் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
