தேர்தல் நாள் நெருங்கும் போது பாதுகாப்பு தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
தேர்தல் நாள் நெருங்கும்போது பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புக்கான பொலிஸ் குழுக்களை கடமையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தீவிர கண்காணிப்பு
மேலும் தெரிவிக்கையில், பொலிஸாரின் தேர்தல் பிரிவு, தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் நாடு தழுவிய வன்முறை நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அனைத்து சம்பவங்களும் பதிவு செய்யப்படுகின்றன. எந்தவொரு மீறல்களுக்கும் எதிராக நாங்கள் உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறோம், தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் போது சிறப்பு முன்னெச்சரிக்கைகள் செயற்படுத்தப்பட்டன.
கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ள பொலிஸ் குழுக்கள்
தற்போது, வழக்கமான பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன, தேர்தல் நாள் நெருங்கும்போது பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்புக்கான பொலிஸ் குழுக்களை கடமையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளோம்.
கொழும்பில் வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதை மேற்பார்வையிடுவது உட்பட, தேர்தல் நடவடிக்கைகளைப் பாதுகாக்கும் பணியை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றார்கள்.
தேர்தல் காலத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்கு அளிக்கப்படும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்களைக் குறைப்பதற்காக, பொலிஸாரின் சிறப்புப் படை மற்றும் முப்படை வீரர்கள் போன்ற சிறப்புப் பிரிவுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
