உள்ளூராட்சி மன்ற தேர்தல் விரைவில்: நிமல்.ஜி.புஞ்சிஹேவா (Video)
எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்பாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது தேர்தல்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல்

யாழ். மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இராஜேந்திரன் கிறிஸ்ரி அமல்ராஜ் தலைமையில் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கலந்துரையாடலில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்.ஜி.புஞ்சிஹேவா, தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், தேர்தல் ஆணையாளர் நாயகம், யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தினை பிரதிநிதிதுவபடுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின்
தவிசாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பு மற்றும் சமூக
ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பிராந்திய ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும்
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri