உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா..! சந்தேகம் வெளியிட்டுள்ள பழனி திகாம்பரம்
எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தாலும், தேர்தல் நடைபெறுமா என்பது சந்தேகத்துக்குறிய விடயமாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் தேசிய சங்க தலைவர் பழனி திகாம்பரம் தலைமையில் நேற்று (12.03.2023) மகளிர் தின நிகழ்வு கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு ஆரம்பத்தில் அறிவித்திருந்தது. இதன்பின்னர் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
எனவே உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா என்பதில் எமக்கு சந்தேகம் உள்ளது.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் என்ன தேர்தல் நடைபெற்றாலும் அதில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியே வெற்றிபெறும்.
இலங்கையில் உள்ள பெண்களில் அதிகளவு துன்பங்களுக்கு உட்படும் பெண்கள் பெருந்தோட்டப் பகுதியிலேயே உள்ளனர் என கவலை வெளியிட்டுள்ளார்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
