மாகாண சபை தேர்தல் குறித்த சி.வி.விக்னேஸ்வரனின் நிலைப்பாடு! சுமந்திரன் வெளியிட்ட தகவல்

Jaffna M A Sumanthiran Sri Lanka Sri Lankan political crisis
By Theepan Jul 27, 2023 10:35 PM GMT
Report

மாகாண சபை தேர்தல் தேவையில்லை என சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியினால் அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக உரையாடுவதற்கு என்று கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

அந்த கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருந்தேன். கூட்டத்தில் அதிகாரப்பகிர்வு என்று சொன்னது பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த 13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி அவர் பேசியிருந்தார். எங்களுக்கு அதில் ஆட்சேபனை இருக்கவில்லை, இருக்கின்ற அதிகாரங்களை அரசியலமைப்புக்கு உகந்த வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த என்று சொல்லுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அது அரசியலமைப்பில் இருக்கின்ற விடயம்.

மாகாண சபை தேர்தல் குறித்த சி.வி.விக்னேஸ்வரனின் நிலைப்பாடு! சுமந்திரன் வெளியிட்ட தகவல் | Local Council Elections In Sri Lanka

அதிகார பகிர்வு

சம்பந்தன் ஆரம்பத்திலேயே எங்களுடைய கருத்தை வெளிப்படையாக சொல்லி இருந்தார். அதாவது தொடர்ந்து நாங்கள் சந்தித்து சந்தித்து பேசுகின்றோமே அல்லாது எதுவும் உருப்படியாக நடக்கவில்லை. உடனடியாக நடைமுறையில் இந்த அதிகார பகிர்வை நாங்கள் காண வேண்டும். இல்லை என்று சொன்னால் உள்ளக அதிகார பகிர்வுக்கு நாங்கள் தயாராக இருக்கின்ற அதே வேளையில் அது கிடைக்காவிட்டால் வெளியகமாக எங்களுடைய சுயநிர்ணய உருத்தை கேட்பதற்கு நாங்கள் தயாராகுவோம் என்று ஐயா சொன்னார்.

இருப்பினும், அதற்கு ஜனாதிபதி பதில் சொல்லியிருக்கவில்லை. ஆனால் மாகாண சபை தேர்தலை நடத்தாமல் காலம் கடத்திக்கொண்டு மாகாண சபை முறைமை பற்றி பேசுவது முறையற்றது என பலர் சுட்டிக்காட்டிய போது, நான் தற்போது கொண்டு வந்திருக்கின்ற தனிநபர் சட்டமூலத்திற்கு அமைவாக மாகாண சபை தேர்தல் வைக்க முடியும் என சுட்டிக்காட்டிய போது தான் ஜனாதிபதி சொன்னார் தேர்தல் இப்போது தேவையில்லை! அதிகார பகிர்வு எப்படி இருக்க வேண்டும் என்று நாங்கள் பேசுவோம் என சொன்னார்.

மாகாண சபை தேர்தல் குறித்த சி.வி.விக்னேஸ்வரனின் நிலைப்பாடு! சுமந்திரன் வெளியிட்ட தகவல் | Local Council Elections In Sri Lanka

அந்த வேளையில் தான் நாங்கள் வலியுறுத்தினோம் இல்லை தேர்தலும் நடாத்தப்பட வேண்டும் இதை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி இருக்கின்றோம் என்று சொன்னபோது, நீங்கள் இந்த இரண்டிலே ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும் ஒன்று தேர்தல் அல்லது அதிகாரங்கள் பகிர்வது இரண்டையும் ஒரே நேரத்தில் கேற்க முடியாது என திட்டவட்டமாக சொன்னார்.

இது ஒரு முரண்பட்ட கருத்து அல்ல இரண்டும் ஒரே திசையில் தான் இருக்கிறது. அப்படி இருக்கின்ற போது நீங்கள் ஏன் ஒன்று மட்டும் தான் கேட்க வேண்டும் என சொல்கின்றீர்கள் என்று நான் அவரோடு வாக்குவாதப்பட்ட போது முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொன்னார் தேர்தல் தேவையில்லை அதிகார பகிர்வு பற்றி பேசுவது தான் முக்கியம் என்று சொன்னார். அந்தக் கருத்தோடு நாங்கள் உடன்படவில்லை.

ஜனாதிபதியின் முக்கிய தீர்மானம்

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பாக மூன்று கட்சித் தலைவர்களும் அங்கே இருக்கின்ற போது அவர்களின் அனுமதியோடு நான் விக்னேஸ்வரன் ஐயா சொன்னதை மறுத்துரைத்தேன். பல வருடங்களாக காலம் மாகாண சபைத்தேர்தல் தாமதமாகி இருக்கின்றது.

மாகாண சபை தேர்தல் குறித்த சி.வி.விக்னேஸ்வரனின் நிலைப்பாடு! சுமந்திரன் வெளியிட்ட தகவல் | Local Council Elections In Sri Lanka

ஆகவே அது உடன் நடத்தப்பட வேண்டும். தேர்தல் நடாத்துவதால் அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக கதைக்க கூடாது என்று எங்கேயும் இல்லை, ஆகவே ஜனாதிபதி தர்க்க ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நாங்கள் இரண்டையும் கேட்கின்றோம் ஒன்று சொல்லியபோது, அப்படியானால் நாங்கள் கூட்டத்தை முடித்துக்கொள்வோம் என சொல்லிவிட்டு ஜனாதிபதி உடன் வெளியில் போய்விட்டார். ஆகவே கூட்டம் நேற்று அரைகுறையுடன் நிறைவடைந்திருக்கிறது தேர்தலைப் பற்றி பேசினால் ஜனாதிபதிக்கு பயம் பிடித்து இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.



மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US