உள்ளூர் விமான சேவை மூலம் ஏற்றிச் செல்லல் சட்டத்தில் திருத்தம்! அமைச்சரவை அங்கீகாரம்
உள்ளூர் விமான சேவையின் பாதுகாப்புக்கு ஏற்புடையதான சட்ட வரையறைகளைப் புதுப்பித்தல், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் உள்ளூர் விமான சேவைகளுக்கான பொறுப்பு வரையறைகளை அடையாளங் காண்பதற்காக2018 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2022.08.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் (திருத்தப்பட்ட) சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri