மறுவாழ்வு திட்டத்தில் வழங்கப்பட்ட கடன்களை ரத்துச் செய்யுமாறு கோரிக்கை
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோருக்கு மறுவாழ்வு திட்டத்தில் வழங்கப்பட்ட கடன்களை மத்திய அரசு ரத்துச்செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிராமிய முன்னேற்ற இயக்கத்தின் தலைவர் ஆவியூர் ஏ.சொர்னமணி இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார்.
உடன்படிக்கை
இந்திய முன்னாள் பிரதமர் சாஸ்த்தியும் இலங்கையின் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் 30.10.1964 ஆம் ஆண்டு செய்துக்கொண்ட உடன்படிக்கையின்படி இலங்கையிலிருந்தும் பர்மாவில் இருந்தும் பெருமளவானோர் தாயகம் திரும்பியுள்ளனர்.
இந்தநிலையில் அவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டத்தின் ஊடாக 1974ஆம் ஆண்டு முதல் 1985ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட வீட்டு கடன் மற்றும் வியாபாரக் கடன்களை ரத்துச்செய்ய மத்திய அரசால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
கடன்கள் ரத்து
இதேபோன்று தாயகம் திரும்பியோருக்கு 1985ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரை வழங்கப்பட்ட கடன்களும் ரத்துச் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கிராமிய முன்னேற்ற இயக்க தலைவர் ஆவியூர் ஏ. சொர்ணமணி கோரியுள்ளார்.
அத்துடன் அவர்களின் நில ஆவணங்கள் மற்றும் குடும்ப அட்டைகள் என்பன திருப்பி
வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களிடம்
வலியுறுத்தியுள்ளார்.