வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்கள் 13 சதவீதத்தால் குறைப்பு: நிதி இராஜாங்க அமைச்சர் தகவல்
வாடிக்கையாளர்கள் வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களை மீள் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும், நிதி நிலைமை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை மறுசீரமைப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து மத்திய வங்கி விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார நெருக்கடி
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் ஒரு தரப்பினர் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்து மாத்திரம் விசேட கவனம் செலுத்த முடியாது. ஒட்டுமொத்த மக்களின் நலனையும் கருத்திற் கொண்டு தான் நிதி நிலைமை குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் வங்கிக் கட்டமைப்பை பாதுகாத்துக்கொள்வது அத்தியாவசியமானது. வாடிக்கையாளர்கள் வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட வணிக கடன்களை மீள் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

நாட்டில் 5 கோடியே 75 இலட்சம் வங்கி வைப்பாளர்கள் உள்ளனர். இவர்களில் 60 சதவீதமான வைப்பாளர்கள் 5,000 ரூபாவுக்கும் குறைவான வைப்புக்களையே வைத்துள்ளனர்.
ஆகவே, நிதி நிலைமை தொடர்பில் தற்போது மறுசீரமைப்புக்கள் ஏதேனும் செய்தால் அதனால் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படுமா என்பது குறித்து மத்திய வங்கி விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan