வட்டி வீதங்கள் குறைப்பு! வர்த்தக வங்கிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளதன் படி, வட்டி விகிதத்தை குறைக்காத வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்பில் மத்திய வங்கி அவதானித்து வருவதாகவும், அவற்றை கடுமையான விதிமுறைகளுக்கு உட்படுத்த தயாராக இருப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கலால் திணைக்கள தலைமையகத்தில் இன்று (07.07.2023) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டும் நிறுவனங்கள்
மேலும் கூறுகையில்,''மத்திய வங்கிக்கு அமைவாக வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு வர்த்தக வங்கிகள் செயற்பட வேண்டும்.

அரச வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான அறிக்கை எதிர்வரும் 12ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.
அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டும் நிறுவனங்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடிய பின்னர் இந்த அறிக்கை தயாரிக்கப்படும்.
மக்கள் மீது புதிய வரிச்சுமையை ஏற்படுத்தாத வகையில் வருமான முகாமைத்துவம் தொடர்பான பல முன்மொழிவுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.‘' என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam