அன்று கோட்டாபய இன்று லிஸ் ட்ரஸ் - அரசியல் நெருக்கடியில் திணறும் பிரித்தானியா
பிரித்தானியாவின் அண்மைய அரசியல் செயற்பாடுகள் இலங்கையை போன்று உள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அண்மைக்காலமாக பிரித்தானியாவில் அரசியல் ஸ்திரமற்ற நிலையில் உள்ளது. மறுபுறத்தில் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருளாதாரம் ஆட்டங் கண்டு வருகிறது.
பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரித்தானியாவின் சமகால பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கையில் இதுபோன்று அமைச்சர்கள் பதவியேற்பதும் சில வாரங்களில் பதவி துறக்கும் நிலை காணப்பட்டது. அதிலும் சிலர் பதவியேற்ற அடுத்த நாளே தமது அமைச்சு பதவிகளில் இருந்து விலகியிருந்தனர்.
அரசியல் ஸ்திரத்தன்மை
இரு நாடுகளிலும் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரதன்மைக்கு நாட்டுத் தலைவர்களின் பொறுப்பற்ற திட்டங்களும் நடைமுறைகளும் ஆகும்.
பிரித்தானிய பிரதமரின் புதிய பொருளாதார கொள்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
இதேபோன்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வரி குறைப்பு மற்றும் சேதன பசளை பாவனையால் இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், விவசாயத்துறை பெரும் சவாலுக்கு உட்பட்டது. இதன் காரணமாக எழுந்த மக்கள் புரட்சியால் தனது பதவிக்கு காலத்திற்கு முன்னர் கோட்டபாய ஜனாதிபதி பதவியை துறந்தார்.
பிரித்தானிய பிரதமராக 45 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்த லிஸ் ட்ரஸ், கடும் அரசியல் ரீதியான அழுத்தம் காரணமாக இன்று பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் மந்தமான பொருளாதாரம்
பிரித்தானிய பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற லிஸ் ட்ரஸ், நாட்டின் மந்தமான பொருளாதாரத்தை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை ஈடுபட்டார்.
அந்த வகையில் லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய வரவு செலவுத்திட்டத்தில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், லிஸ் ட்ரஸின் இந்த முடிவு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த உதவவில்லை. மாறாக, அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
இதனால், டொலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு குறைந்து வருகிறது. பங்குச் சந்தை மதிப்புகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன. விலைவாசியும் நாளும் அதிகரித்தது. தனது தவறான பொருளாதார கொள்கைகளுக்கு லிஸ் ட்ரஸ் மன்னிப்பும் கேட்டிருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் அவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
