சட்டவிரோத மின்சார வேலியால் இறக்கும் கால்நடைகள் : பண்ணையாளர்கள் கவலை
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்விளான் பகுதியில் சில பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலிகளில் சிக்கி தமது கால்நடைகள் உயிரிழப்பதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமது வாழ்வாதாரமான கால்நடைகள் குறித்த சட்டவிரோத மின்சார வெளியில் சிக்கி நோய்வாய் படுவதாகவும் ஓரிரு நாட்களில் அவை இறந்து விடுவதாகவும் தெரிவித்த பண்ணையாளர்கள் இதுவரை 20க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளி்ன் அசமந்த போக்கு
இதேவேளை காடுகளில் கால்நடைகளை விட்டு மேய்க்கும் போதும் காடுகளில் கம்பி சுருள் தடங்களினாலும் தமது கால்நடைகள் இறப்பதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் கிராம அலுவலகருக்கு தெரியப்படுத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தமது வாழ்வாதாரமாக இருக்கும் கால்நடைகளை சட்டவிரோத மின்சார வேலியில் இருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.



பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri