தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து - கோமகன் எச்சரிக்கை
சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை பார்க்கும்போது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் தலைவர் கோமகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று(11.07.2026) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சிறைச்சாலைகளில் கைதிகளும் மனிதர்களே என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், அங்கு கைதிகள் மீது மிலேச்சத்தனமான கொடுமைகளே அரங்கேற்றப்படுகின்றன.
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். கைதிகள் யாராலவும் இருக்கலாம். ஆனால் அவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிசெய்வது அவசியம். அதே நேரம் இந்தச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சிறைச்சாலைகளில் நிலவும் இவ்வாறான வன்முறைச் சூழலை நோக்கும்போது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் திட்டமிட்ட தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாம் கருதுகிறோம்.
இவ்வாறான சூழலில் சிறைச்சாலைகளுக்குள் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அதிகாரிகள் காட்டும் மெத்தனப் போக்கையும், அங்கு இடம்பெறும் மனித உரிமை மீறல்களையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன் என சாடியுள்ளார்.
புலம்பெயர்ந்தோர் விடயத்தில் கடுமையாக நடக்கவேண்டாம்: பிரித்தானியாவின் அடுத்த பிரதமருக்கு கடிதம் News Lankasri
அந்த குழந்தையா இது!! சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! சமீபத்திய புகைப்படம்.. Cineulagam