குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்யவுள்ள லிட்றோ நிறுவனம்!
லிட்றோ எரிவாயு நிறுவனம் தாய்லாந்தில் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்வது தொடர்பில் ஆலோசித்து வருவதாக நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தாய்லாந்தில் இருந்து ஆண்டுக்கு 300,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்தில் இருந்து எரிவாயு கொள்வனவு விலை ஒரு மெட்றிக் தொன்னுக்கு 95 டொலர் செலவாகிறது.
முன்னதாக ஓமானில் இருந்து கொள்வனவு செய்யும் எரிவாயு மெட்றிக் தொன் ஒன்றுக்கு 105 டொலர் செலவானது
]
இதன்படி தாய்லாந்தில் இருந்து எரிவாயுவை கொள்வனவு செய்வதன் மூலம், ஒரு மெட்ரிக் தொன்னுக்கு 10 அமெரிக்க டொலர் லாபம் கிடைக்கும் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
தாய்லாந்தில் கட்டளை சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதல் எரிவாயு கப்பல், அடுத்த மாதம் நாட்டை வந்தடையும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்
எனினும் குறைந்த விலையில் எரிவாயு கொள்வனவு செய்யப்படுவதால், எரிவாயு கொள்கலனின் விலை குறையுமா என்ற விடயத்தை அவர் தெரிவிக்கவில்லை..



