இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மற்றுமொரு விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு எரிவாயு விலை மேலும் குறையலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயுக்கான விலை குறைப்பை அடுத்த மாதம் நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக வங்கியிடம் பெற்ற கடன்
லிட்ரோ நிறுவனம் உலக வங்கியிடமிருந்து பெற்ற கடனை டிசம்பர் மாதம் செலுத்த முடியும் என அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“செப்டெம்பரில் 6.5 பில்லியனும், அக்டோபரில் 7.5 பில்லியனும் கடன் செலுத்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள கடனை டிசம்பர் மாதத்திற்குள் உலக வங்கியிடம் செலுத்த எதிர்ப்பார்க்கின்றோம்.”என தெரிவித்துள்ளார்.
விலை குறைப்பு
உலக சந்தையில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியை கருத்தில் கொண்டு கடந்தகாலங்களில் 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு கொள்கலனின் விலை 200 முதல் 300 வரையில் குறைக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய அக்டோபர் 05ஆம் திகதி 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலன் 271 ரூபாவால் குறைக்கப்பட்டது.
தற்போது 12.5 லிட்டர் 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலன் 4,280 ரூபாவிற்கு விற்கப்படுகின்றது.