லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலைகள்! வெளியானது முழு விபரம்
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக அண்மையில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
12.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன்
அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 271 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதன் புதிய விலை 4280 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன்
அத்துடன், 5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலை 107 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 1720 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

2.3 கிலோகிராம் எரிவாயு கொள்கலன்
மேலும் 2.3 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலை 48 ரூபாவினால் குறைக்கப்பட்டு 800 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த விலைக்குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan