எரிவாயு விலை குறைப்பு! வெளியான விபரம்
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்படுவதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் புதிய விலை தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு
அதன்படி 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 201 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 12.5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் சிலிண்டலின் புதிய விலை 4409 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு
அத்துடன் 5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 80 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 5 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1770 ரூபா என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் 2.3 கிலோ கிராம் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 38 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan