லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு: புதிய விலை விபரம் வெளியானது
லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று (03.05.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிய விலை விபரம்
இதற்கமைய 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 3,638 ரூபாவாகும்.

இதேவேளை 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,462 ரூபாவாகும்.
மேலும் 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை19 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 681 ரூபாவாகும்.
லாஃப் எரிவாயு விலை

இந்நிலையில் லாஃப் எரிவாயு நிறுவனம் எந்தவித விலை குறைப்புகளையும் மேற்கொள்ளாது என அறிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயு விலைகள் அதிகரித்த போதிலும், லாஃப் எரிவாயு உற்பத்திகளின் விலையை அதிகரிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam